கவிஞர் சை. சபிதா பானு கவிதைகள்


 

கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி நகர தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்.  நிறைய கவிதை புத்தகங்கள் எழுதியுள்ளார். பல்வேறு தொலைக்காட்சி விவாத மேடைகளில் பேசியிருக்கிறார். தற்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மென்மேலும் சிறக்க புதிய சிற்பி சார்பில் வாழ்த்துக்கள்...

முயற்சி


வாழ்க்கையில் முன்னேறி விட !
எதிர்வரும் முட்டுக்கட்டைகளை தகர்த்து விட !
முயற்சித்து முட்குச்சியை   அறியாமையில்  !வாயில் சுமந்து செல்லும் !
அழகிய வெண் நாரையும்   நானோ ...?!
வண்ண பறவை இனங்கள்  !
வெறுத்து  ஒதுக்கப்பட்ட  ஜீவனும் நானோ  ..?!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

அன்னை என்னும் ஆலயம்


என்னை ஈன்று எடுத்த இறைவியே  !
நீ இன்றி உலகம் ஏது  ..?!
நீர் இன்றி நில உயிர்கள் !
வாழ்ந்தாலும் அன்னையே உன் உறவு  !
அற்று அகிலம் காணுமோ இன்பம்  !
கண் முன் தோன்றிய கடவுளே  !
அனைவரும் விரும்பும் அன்பு ஜீவனே  !
உன்னால் உலகம் சுழலுதோ நில்லாமல் !
நின் அன்பினால் இதயங்கள் இன்புறுமே   !
இமைகளில் ஆனந்தக்கண்ணீர் பெருகுமே  !
ஆலயத்திற்கு அழகு சேர்த்திட பிறந்தாயோ  !
நீ வேண்டுமே ஆரு உயிரே  !
தினமும் தரிசனம் தரும் தெய்வமே  !
தங்க மங்கையே தரணி ஆளும்  !
வல்லமை பொருந்திய இறை அருளே !
இறைவனின் உன்னத படைப்பும் நீயே  !
உயிர்களின் இதயத்துடிப்பும் நீயே  !
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இசை


இசையோடு இணைந்தேன்  !
இறந்தகால இன்னல்களை மறந்தேன்  !!
மெல்லிய தென்றலின் மென்மையை ! 
மெல்லிசையில் உணர்ந்தேன்  !!
இசையில் நிரம்பி வழியும் இன்பத்தை  !
என் இதயத்திற்கு பரிசளித்தேன்  !!
பா இசைத்து
பாவை நானும் பரவசமடைந்தேன்  !!
சுரங்களின் வழியில் ! சொர்க்கத்தை அடைந்தேன்  !!
இனிமை இசையில் தான் என்பதை உணர்ந்தேன்  !
நான்  என்ற  கர்வம் தொலைத்துவிட்டேன் !! 
அடைந்த தொல்லைகள் ஆயிரத்தையும்  !
மறந்து ஆனந்தம் அடைந்தேன்  !!
இறைவனின்  சாயலாய்  !
இசைக்கருவியை பார்த்தேன்  !!
ஆண்டவனின் படைப்பில்  !
இசை அற்புதம் என்றேன்  !
இன்னிசையில் மூழ்கி  ! 
தனிமையை மறந்து விட்டேன்   !!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

மொழியின் பெருமை


தன்மானம் காக்கும் தமிழ் மொழி  !
தரணி போற்றும் தங்க மொழி  !
அடையாளப்படுத்தும் அழகு மொழி  !
அகிலம் விரும்பும் அன்பு மொழி  !
இதயங்கள் விரும்பும் இனிய மொழி  !
இளமைத் தன்மை மாறா கன்னிமொழி !
 காலங்களை வென்ற காவிய மொழி  !
கவிஞர்கள் விரும்பும் சுந்தர மொழி  !
எல்லோரையும் ஈர்க்கும்  எளிய மொழியில்  !
எல்லைகளைத் தாண்டி ஏற்றம் கண்ட மொழி  !

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இணையக் கல்வி இனிக்கும் கல்வி



இருக்கும் இடத்தைத்  தேடி வந்த வரமே ! 
இணையக் கல்வி  !!
இன்றைய சூழலுக்கு உதவிட !
 உதவிக்கரம்  நீட்டிட !
 உள்ளங்கையில்  உதித்த கல்வி  !!
இதயத்திற்குள் இனிக்கும் கல்வி  !
இணையில்லா  இனணய கல்வி !!
இன்னலை போக்கிட !
இளம் தென்றலாய் தோன்றிய கல்வி  !!
 இளைய தலைமுறை மேம்பட!
 உருவான உன்னத கல்வி !!
அவசர கால ஆசிரியராய் !  
அகிலத்தில் அவதரித்த கல்வி !!
ஆசிரியரின் அறப் பணியை ஆற்றிட ! 
உறுதுணையாய் நிலை  நிற்கும் கல்வி  !!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

மானிடம் ஈர்த்த மரங்கள்


தன்னலமற்ற செயலால் தரணியை  !
காக்க வந்த கடவுளின் படைப்பே  !
உனது பெயர் தான் மரங்களோ ...!
உன்னால் உலகம் மழை பெறுதோ ! 
எடுத்துக்காட்டாக நீ இருக்க !
எழுந்தருளியதோ  மக்களின் மனதில் மனிதம்  !
வெயிலுக்கு கிடைத்த குளுமையும்  !
மானிடத்தை ஈர்த்த  மகத்துவமும் நீதானோ ....!
மழையை அழைக்கும் கரமும் !
 உயிரை சுமக்கும் காற்றையும் ! 
தரணிக்கு தந்து வள்ளலாய் வாழ்கின்றாய்யோ ...!
மரமே மனிதன் உன்னே வெட்டினாலும்  !
 விறகாக்கி  எரித்து சாம்பலாக்கி னாலும்  !
மாறா நற்குணம் கொண்டு  !
மனிதம் காக்க உயிர் காற்றாய் மாறி  !
மானுட மனங்களை வென்றாய்யோ !

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

உயிர்களிடம் அன்பு காட்டு


மனித வாழ்வில் ! 
மனிதத்தை உணர்த்திட !  
பிற உயிர்களிடம் அன்பு காட்டு !!

சாதி மதம் தாண்டி ! 
சமத்துவம் விளங்கிட ! 
உயிர்களிடத்தில் அன்பு காட்டு !

உள்ளத்தால் உயர்ந்த மாமனிதன் நீ ! 
என மண் உலகுக்கு அடையாளம் காட்டிட ! 
மனிதத்தை நீ வெளிக்காட்டு !
இறைவனுக்கு அடுத்த நிலையை அடைந்திட ! 
உயிர்களிடத்தில் அன்பு செலுத்திட !
வலியின் வலியை நீ உணர்ந்து ! 
வறியவருக்கு  வாரி வழங்கிடு ! 
உனது அன்பையும் அரவணைப்பையும்  !
ஆதரவற்றோரிடம்  உனது 
அன்பு மழையில் நனைத்திடு !
அன்பின் அடையாளமாய் 
அகிலத்தின் முன்  நீ வலம்  வந்திடு  !
அனு பொழுதும்  ! 
அன்பைப் பொழியும் ! 
அன்னையின் திரு உருவாய் மாறி ! 
உயிர்களிடம் அன்பு காட்டு !
அன்பிற்கு அடி பணியா 
உயிரும் உண்டோ என்று 
உலகிற்கு  உணர்த்திடு !

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

கடந்து செல்வதே வாழ்க்கை  !
கருணையற்ற கொரோனாவே !
எங்களை கடத்தி அல்லவா செல்கிறாய்  !
கால் வயிற்று கஞ்சிக்கு அல்லாட விடுகிறாய்  !
இடம்பெயர்ந்து செல்ல செய்கிறாய்  !
மனித இதயங்களை ரணமாக்கி மகிழ்கிறாய் !
கால தேவனாய் காட்சியளிக்கிறாய் !
கண்டம் விட்டு கண்டம் தாவி திரிகிறாய்  !
மக்களைக் கொன்று குவிக்கின்றாய்  !
மனித நேயமற்ற அரக்கனாக தெரிகிறாய்  !
உன் ஆட்டத்தை நிறுத்திவிடு !
 உலக மக்களை வாழவிடு  !

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

மிருக முகமானாலும் நன்றி  மறவாத  நற்குணமும்
நன்றிக்கு உதாரணமும் நீ அல்லவா ..!

அன்பிற்கு அடிபணியும் ஆக்ரோஷமும் !
அனைவரின் வீட்டின் செல்லப்பிராணியும்  நீ அல்லவா .... !

அர்த்தராத்திரியில் உடமைகளை காத்திடும் காவலனும் !
மனிதநேயமற்ற மனிதனுக்கு மனிதம்  புகட்டும் அறிவும் நீ அல்லவா ..!

வைரவர் கடவுளின் அம்சமும் !
வாயில்லா ஜீவனின் வம்சமும் நீ அல்லவா ..!



Newest
Previous
Next Post »