அதிர்ஷ்ட பூஜையறை இரகசியங்கள்

 


உங்கள் வீட்டு பூஜையறையை தெய்வ கடாட்சத்தோடு வைத்துக்கொள்ள கீழ்க்கண்ட குறிப்புகளை கட்டாயமாக செய்யுங்கள் :-

🔯 முதலில் தனது வீட்டில் கோலம் போட்டு விளக்கேற்றி வழிபட்ட பின்னரே கோவில்களுக்கு செல்ல வேண்டும்.

🔯 சுவாமி படங்களுக்கு புஷ்பம் சார்த்தும் பொழுது சுவாமிகளின் முகத்தையோ பாதத்தையோ மறைக்கும்படி சார்த்தகூடாது. நாம் சுவாமி கும்பிடும்போது பாதத்தையும் முகத்தையும் பார்த்து வணங்கி வழிபட வேண்டும்.

🔯  சிவபெருமான், பார்வதி நாச்சியாருடன் கணபதி, முருகன் இணைந்து உள்ள படம் கிடைத்தால் கிழக்குப் பக்கம் பார்க்கும்படி மாட்டி வையுங்கள். வீடுகளில் ஏற்பட்டுள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கிவிடும்.

🔯   சுவாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை சூடாதீர்கள்.

🔯  சுவாமி படங்களை கிழக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். கிழக்குப் பகுதியில் வைக்க முடியாவிட்டால் தெற்கு பகுதியை தவிர மற்ற பகுதியில் வைத்து வழிபடலாம். நாம் தெற்குப் பக்கம் நின்றுகொண்டு வடக்குப் பார்த்தவாறு வணங்கலாம்.

🔯  கற்பூர தீபம் காட்டிவிட்டு தானே மலையேறும் வரை பொறுமை காக்க வேண்டும். கைகளால் அணைக்கவோ. ஊதி அணைக்கவோ கூடாது.     

🔯 
பித்தளை. வெள்ளி விளக்குகளை மட்டுமே பயன்படுத்துங்கள். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தாதீர்கள்.

🔯ஏற்றி வைத்திருக்கும் விளக்கிலிருந்து சூடத்தையோ ஊதுபத்தியையோ பற்ற வைக்கக்கூடாது.

🔯 இறைவனின் படங்களை தவிர பூஜை அறைக்குள் உங்கள் மூதாதையரின் புகைப்படங்கள் மாட்டி வழிபாடு செய்வதை தவிர்த்திடுங்கள்.  மூதாதையர் புகைப்படங்களை தனியாக வேறு அறைகளில் மாட்டி வழிபடுங்கள். இதுவே சிறந்த பலனை தரும்.

🔯 வீட்டில் யாராவது உறங்கிக்கொண்டிருந்தால் பூஜை அறையில் விளக்கேற்றாதீர்கள். எழுந்தபின்பு விளக்கேற்றி வழிபடுங்கள்.  

🔯 முறையாக குருவிடம் தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை தண்ணீரில் குழைத்து பூசவேண்டும்.மற்றவர்கள் அவ்வாறு செய்யக்கூடாது.

🔯 தேங்காய் இரண்டாக உடையாமல் சிதறுகலாய் உடைந்து போனால் வேறு தேங்காய் உடைக்க வேண்டும். அதையே வைத்து நைவேத்தியம் செய்யக் கூடாது.

🔯 சுவாமி படங்களில் மின்சார வயர்களைக் கொண்டு அலங்காரம் செய்தல் கூடாது. 

🔯 துளசியால் நைவேத்தியம் செய்தால் விஷ்ணுவின் வாசம் எப்போதும் உண்டு.

🔯 நைவேத்தியம் செய்யும் பொழுது வெற்றிலை பாக்குகளை இரட்டைப் படையாக அமையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

🔯 நைவேத்தியம் செய்யும் பொழுது பழங்கள், பூக்கள் போன்றவற்றை தரையில் படும்படி வைக்கக்கூடாது. தம்பாளத்தில் வைத்தே வழிபட வேண்டும்.

🔯 வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தால் அவர்களையும் உங்கள் பூஜையில் பங்கேற்க வையுங்கள். அவர்களை வழியனுப்பி விட்டு செய்யும் பூஜை முழு பலன்களை தராது.

🔯 பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிந்து பூஜை செய்தல் வேண்டும். ஸ்டிக்கர் போட்டு வைத்து பூஜை செய்யகூடாது.

🔯 சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலத்தை அளிக்கும் அம்பாள் குடியிருக்கும் இடம் பெண்களின் குங்கும பொட்டிட்ட நடு வகிடுதான். நடு வகிட்டில் குங்கும பொட்டிட்ட பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டு.

🔯 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் குத்துவிளக்கில் சந்தனப் பொட்டு  வைத்து பூக்களால் அலங்காரம் செய்து குங்குமத்தாலோ மலர்களாலோ மஞ்சள் அட்சதை கொண்டோ பூஜை செய்தால் மஹாலட்சுமி நிரந்தமாய் குடியிருப்பார்.

🔯மாலையில் விளக்கு ஏற்றும் பொழுதிற்கு முன்பாகவே தானம் செய்துவிடுங்கள். விளக்கேற்றிய பிறகு தான தர்மம் செய்தலாகாது.

🔯 சுவாமி படங்களில் மாட்டியிருந்த பழைய மாலைகள் மற்றும் பூக்களை ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும்.

🔯 இறைவனின் படங்களை வடக்கு முகமாக மாட்டி வைப்பதை கட்டாயம் தவிர்க்கவேண்டும். தோஷத்தை உண்டாக்கிவிடும்.

🔯   ஈரமான உடையணிந்தோ, ஒரே ஒரு ஆடை அணிந்தோ, தலையில் துணியை கட்டிக்கொண்டோ பூஜை செய்யக்கூடாது.

🔯   வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் எல்லா அறைகளிலும் சிறிய அகல் விளக்குகளை ஏற்றி வையுங்கள். விளக்குகளின் ஒளியில் உங்கள் கஷ்டங்கள் அகலும்.

🔯  விளக்கேற்றும் பொழுது உங்கள் இல்லத்தின் பின்பக்க கதவை சாத்திவிடுங்கள்.

🔯  பெண்கள் வீட்டிலிருக்கும் பொழுது ஆண்கள் விளக்கை மலைஏற்றக் கூடாது.

🔯   வாழைப் பழத்தில் ஊதுபத்தியை சொருகி வைத்தல் கூடாது.

🔯 பூஜை அறையின் கதவில் ஓம் மற்றும் ஸ்ரீசக்கரம்ஸ்வஸ்திக் திரிசூலம் சின்னங்களை ஒட்டி வைத்தல் அதிர்ஷ்டம் அளிக்கும்.




Previous
Next Post »