எஸ்பி. சரவணன் கவிதைகள் பகுதி -2




SPSaravanan Kavithaigal Tamil P2




பொறாமை

கையில் அணிந்திருந்த
கடைசி மோதிரத்தையும்
அடகு வைத்துவிட்ட பிறகு
ஹரிநாடாரின் 
புகைப்படத்தைப் பார்ப்பதையே 
தவிர்த்து விடுகிறது மனது!


💜


எதிர்பார்ப்புகள்

விட்டுச்சென்ற காதலியை
வெகுகாலத்திற்குப் பிறகு பார்த்தேன்
கையில் குழந்தையுடன்....!
குழந்தைக்கு என் பெயரை 
வைத்திருப்பாளா?
குழந்தையின் பெயர் என்ன?
மனது படபடக்க
ஆவலாய்க் கேட்டேன்
அவள் கணவரின் தாத்தா பெயராம்
ஏதோ ஒரு பெயர் சொன்னாள்
எப்பவாச்சும்னா பரவாயில்லை
எப்போவுமே ஏமாற்றம்னா
என்ன பண்றது!


💜


வெறுமை

ஓடிக்கொண்டேயிருக்கிறேன்...
திரும்பிப் பார்த்தபோது
பாலைவனம் போல் வெறுமை!
முன்னாலும் வெறுமையே...
வாழும் காலம்வரை 
வெறுமையை நோக்கி
ஓய்வில்லாமல்
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்!


💜


வாழவிடுங்கள்

பெரும் சூறாவளிக்குள் சிக்கி
சின்னாபின்னமான வாழைத் தோட்டம் போல்
சிலரின் பொறாமைகளாலும் துரோகங்களாலும்
சிதைந்துபோய்க் கிடக்கிறது மனது!
இத்தனைக்கும் சொல்லிக்கொள்ளும்படியாய்
பெரிதாய் எதையும் சாதித்துவிடவில்லை நான்!

💜

சாமியார்கள்

எல்லாவற்றிற்குமே 
புரோக்கர் வைத்து காரியம் சாதித்த மனது
கடவுளிடம் காரியம் சாதிக்க
சாமியார்களை நாடுகிறது...!
Previous
Next Post »