சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் காயங்களுடன் மோசடி மன்னன்

சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் காயங்களுடன் மோசடி மன்னன் மொகுல் ஜோஷி




கடந்த ஜனவரி 2018ம் ஆண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி நீரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் வைர வியாபாரியுமான மொகுல் ஜோஷி தனது குடும்பத்தினருடன் இந்தியாவை விட்டு தப்பியோடி கரீபியன் தீவில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 30.01.2018ல் இவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இவரை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டுவந்து விடவேண்டும் என்று இந்திய அரசு பெரும் முயற்சி எடுத்து வந்தது. இந்நிலையில் இவர் ஆண்டிகுவாவில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த 2021 மே 23ம் தேதி தனது வீட்டிலிருந்த மொகுல் ஜோஷி காணாமல் போய்விட்டதாகவும் பிறகு கடந்த 2021 மே 26ம் தேதி டொம்னிகாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கைது செய்யப்பட்ட மொகுல் ஜோஷி டொம்னிகா அரசு ஆண்டிகுவாவிடம் ஒப்படைத்துவிட்டது. டொம்னிகா சிறையில் இருந்து வெளியான புகைப்படங்களாக சில படங்கள் இப்போது ஊடகங்களில் வெளியாகி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகைப்படத்தில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அவர் இருப்பது போன்றும் அவரது கையிலும் மணிக்கட்டுகளில் காயமும், இடது கண் சிவந்தும் காணப்படுகிறது.

மொகுல் ஜோஷியின் டொம்னிகா வழக்கறிஞர் வைன் மார்ஷ் கூறுகையில் தனது கட்சிகாரரை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக டொம்னிகா கொண்டு சென்றதாகவும் அங்கு சென்று அவரை ஏதோ எலக்ட்ரோனிக் ஆயுதத்தால் தீக்கயங்களை உடலில் ஏற்படுத்தியதாகவும், கடுமையாக தாக்கியதாகவும் மொகுல் ஜோஷி தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து இவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் தனது கட்சிகாரரை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக டொம்னிகா கொண்டு சென்ற விவகாரம் குறித்து தகுந்த நீதி விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே இந்தியாவிலிருந்து தப்பியோடிய வைர வியாபாரி மொகுல் ஜோஷியை உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் உரிய முறையில் மனுச்செய்து இந்தியா கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

Previous
Next Post »