எஸ்பி. சரவணன் கவிதைகள்
இருபது
ஆண்டுகள்
கடந்துவிட்ட பின்னரும்
இன்னும் இளமையாகவே
இருக்கிறது
நீ எழுதிய
காதல் கடிதம்!
கடந்துவிட்ட பின்னரும்
இன்னும் இளமையாகவே
இருக்கிறது
நீ எழுதிய
காதல் கடிதம்!
💕
மறந்துபோன
திருமணத்திற்கு
பத்திரிக்கை கொடுத்தவர்
எதிரில் வந்தால்
சமாளிக்கும் வித்தையை
யாரிடம் கற்றுக்கொள்வது!
பத்திரிக்கை கொடுத்தவர்
எதிரில் வந்தால்
சமாளிக்கும் வித்தையை
யாரிடம் கற்றுக்கொள்வது!
💕
உன்
பாசத்தை நேசிக்க
பலபேர் இருக்கலாம்
உன்னை
உயிராய் சுவாசிக்க
என்னைத் தவிர
யார் இருக்க முடியும்!
பாசத்தை நேசிக்க
பலபேர் இருக்கலாம்
உன்னை
உயிராய் சுவாசிக்க
என்னைத் தவிர
யார் இருக்க முடியும்!
💕
நீயும் நானும்
பேசும் நேரங்களில் மட்டும்
இந்த கடிகார முட்கள்
உசேன் போல்டைவிட
வேகமாய் ஓடுகிறதே
ஏன்?
நீயும் நானும்
பேசும் நேரங்களில் மட்டும்
இந்த கடிகார முட்கள்
உசேன் போல்டைவிட
வேகமாய் ஓடுகிறதே
ஏன்?
💕
யாரோ போல
என்னை
கடந்து செல்லும் திறமையை
எங்கு கற்றுக் கொண்டாய்
நீ?
என்னை
கடந்து செல்லும் திறமையை
எங்கு கற்றுக் கொண்டாய்
நீ?
💕
சட்டென்று சண்டைபோட
என்னருகில்
நீ வேண்டும்!
என்னருகில்
நீ வேண்டும்!
💕
நீ இல்லாத
நேரங்களில்
என்னருகிலேயே இருக்கிறது
உன் நினைவுகள்!
நேரங்களில்
என்னருகிலேயே இருக்கிறது
உன் நினைவுகள்!
💕
உன் நினைவுகளைச்
சுமந்துவரும்
ஒவ்வொரு நொடிகளுமே
சொர்க்கம்!
சுமந்துவரும்
ஒவ்வொரு நொடிகளுமே
சொர்க்கம்!
💕
கரடுமுரடான பாதைகளைக் கூட
எளிதாய் கடந்திடுவேன்
உன்
பஞ்சு விரல் பற்றி நடந்திடும் போது!
எளிதாய் கடந்திடுவேன்
உன்
பஞ்சு விரல் பற்றி நடந்திடும் போது!
💕
எந்தக் கட்டளையும்
இல்லாமல்
என்னைக் கட்டுப்படுத்திவிடுகிறது
உன் கண்கள்!
இல்லாமல்
என்னைக் கட்டுப்படுத்திவிடுகிறது
உன் கண்கள்!
💕
உன்
கண்களைவிட
மிகச் சிறந்த கவிதை
இன்னும்
எழுதப்படவில்லை!
கண்களைவிட
மிகச் சிறந்த கவிதை
இன்னும்
எழுதப்படவில்லை!
💕
பேசாத போதும்
பேசிக்கொண்டேயிருக்கின்றன
நீ
பேசிப்போன வார்த்தைகள்!
பேசிக்கொண்டேயிருக்கின்றன
நீ
பேசிப்போன வார்த்தைகள்!
💕
உன்னோடு வாழ்ந்து
உன்னுடனேயே இறந்துபோகும்
வரம் வேண்டும்
எனக்கு!
உன்னுடனேயே இறந்துபோகும்
வரம் வேண்டும்
எனக்கு!
💕
விழிக்கும்
நேரத்திலிருந்து
உறங்கும் நேரம்வரை
கூடவே வருகின்றது
உன் நினைவுகள்!
உறங்கும் நேரம்வரை
கூடவே வருகின்றது
உன் நினைவுகள்!
💕
நிலம் அதிர
புகைவண்டி கடப்பதுபோல்
என்
மனம் அதிர
என்னைக் கடந்து விடுகிறாய்
நீ!
புகைவண்டி கடப்பதுபோல்
என்
மனம் அதிர
என்னைக் கடந்து விடுகிறாய்
நீ!
💕
விபத்தில்
சிக்கிய ஜோடியை
மனிதாபிமானத்தோடு அணுகி
நகைகளை கழட்டிச்சென்றார் ஒருவர்!
கைப்பையை எடுத்துசென்றார் ஒருவர்!
வீடியோவாய் எடுத்துச்சென்றனர் பலர்!
மனிதாபிமானத்தோடு அணுகி
நகைகளை கழட்டிச்சென்றார் ஒருவர்!
கைப்பையை எடுத்துசென்றார் ஒருவர்!
வீடியோவாய் எடுத்துச்சென்றனர் பலர்!
💕
எல்லாப்பூக்களும்
அழகானவையே
அழகில்லாப் பூக்கள்
இவ்வுலகில் உண்டா என்ன?
அழகில்லா மனிதனும்
இவ்வுலகில் இல்லை
சிலர் உடலாலும்
சிலர் மனதாலும்
அழகாகவே இருக்கின்றனர்
பூக்களைபோலவே!
அழகில்லாப் பூக்கள்
இவ்வுலகில் உண்டா என்ன?
அழகில்லா மனிதனும்
இவ்வுலகில் இல்லை
சிலர் உடலாலும்
சிலர் மனதாலும்
அழகாகவே இருக்கின்றனர்
பூக்களைபோலவே!
💕
வாழ்வில்
ஒரு மரத்தையாவது
நட்டுவிடுங்கள்
நாம் வாழ்ந்து மறைந்தபின்னும்
அவை வாழ்ந்து
உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும்
ஆக்சிஜன் இல்லாமல்
அவதியுறும் நிலையை
அனுபவிக்கக் கூடாது எனில்
வாழ்வில் ஒரு மரத்தையாவது
நட்டுவிடுங்கள்
நட்டுவிடுங்கள்
நாம் வாழ்ந்து மறைந்தபின்னும்
அவை வாழ்ந்து
உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும்
ஆக்சிஜன் இல்லாமல்
அவதியுறும் நிலையை
அனுபவிக்கக் கூடாது எனில்
வாழ்வில் ஒரு மரத்தையாவது
நட்டுவிடுங்கள்
💕
மழை
பிடிக்காத மனிதன் இல்லை
ஏழை, பணக்காரன்
நல்லவன், கெட்டவன்
என்கிற பேதமே இல்லாமல்
ஒரே மாதிரியாக
சிலநேரம் மிதமாய்
சிலநேரம் இதமாய்
சிலநேரம் ஆக்ரோஷமாய்
கொட்டிக்கொடுத்துச் செல்கிறது மழை!
ஏழை, பணக்காரன்
நல்லவன், கெட்டவன்
என்கிற பேதமே இல்லாமல்
ஒரே மாதிரியாக
சிலநேரம் மிதமாய்
சிலநேரம் இதமாய்
சிலநேரம் ஆக்ரோஷமாய்
கொட்டிக்கொடுத்துச் செல்கிறது மழை!
💕
பூக்களும்
முட்களுமாய்
மனதை வருடிச் செல்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்!
மனதை வருடிச் செல்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்!
💕
பன்றி
வளர்த்து மாதம்
பத்து லட்சம் சம்பாதிப்பதாக
பசுமை விகடன்
பணப்போதை ஏற்றுவது போல்
எனக்குள் மனப்போதை ஏற்றுகிறது
உன் பேரழகு!
பத்து லட்சம் சம்பாதிப்பதாக
பசுமை விகடன்
பணப்போதை ஏற்றுவது போல்
எனக்குள் மனப்போதை ஏற்றுகிறது
உன் பேரழகு!
ConversionConversion EmoticonEmoticon